August 9, 2018
தண்டோரா குழு
இந்திய- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று துவங்குகிறது.
இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா,3 டி20 போட்டிகள்,3 ஒருநாள் போட்டிகள்,5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.டி20 தொடரை இந்தியாவும், ஒருநாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது.
இதனையடுத்து இங்கிலாந்தின்,பர்மிங்காம் நகரில் உள்ள எட்க்பஸ்டன் மைதானத்தில் நடைப்பெற்ற முதல் டெஸ்ட்போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது.இந்நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று துவங்குகிறது.
லார்ட்ஸ் மைதானத்தில் இதுவரை 17டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 11 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.மேலும்,4 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளது.இந்திய அணியை பொறுத்த வரை இந்த மைதானத்தில் இரண்டு முறை மட்டுமே வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.