• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கலைஞர் இறந்த துக்கம் தாங்காமல் திமுக விசுவாசி தூக்குப்போட்டு தற்கொலை

August 9, 2018 தண்டோரா குழு

கோவையில் கலைஞர் இறந்த துக்கம் தாங்காமல் திமுக விசுவாசி தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைருமான கருணாநிதி ஆகஸ்ட் 7ம் தேதி மாலை காலமானார்.நேற்று மாலை லட்சக்கணக்கான தொண்டர்களின் கண்ணீர் கடலில் மிதந்தபடி கருணாதியின் இறுதி ஊர்வலம் நடைபெற்று மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே அவரது உடல் நல்லடக்கம் செய்யபட்டது.இதற்கிடையில்,கருணாநிதியின் இறப்பு செய்தி கேட்டு பல தொண்டர்கள் தங்கள் உயிரை மாய்த்து வருகின்றனர்.

இந்நிலையில்,கோவை அருகே உள்ள ஒக்கிலிப்பாளையம் குப்பாண்ட கவுண்டர் தெரு பகுதியில் வசிப்பவர் நடராஜன்.அவருடைய மகன் மணி (52) சைக்கிள் கடை வைத்து நடத்தி வருகிறார்.நேற்று இரவு திமுக தலைவர் கருணாநிதியின் இறுதிச் சடங்கை பார்த்துக் கொண்டிருந்தவர் திடீரென்று அழுது கொண்டே ரூமிற்கு என்று தாழிட்டு கொண்டார்.

இன்று அவரது உறவினர் பார்த்த போது மணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.இதையடுத்து,செட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க