• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவு கடிதம்

August 9, 2018 தண்டோரா குழு

திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருணாநிதிக்கு நினைவு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் நேற்று முன்தினம் மாலை 6.10 மணியளவில் காலமானார்.இதைத்தொடர்ந்து ராஜாஜி அரங்கில் முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய நிலையில்,நேற்று மாலை சுமார் 4 மணியளவில் கருணாநிதி உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு,பின்னர் அரசு மரியாதையுடன் நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவருக்காக நினைவு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அந்த கடிதத்தை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

அந்த கடிதத்தில்,

உலகமே உங்களை கலைஞரே!என்று அழைத்தாலும்,
உணர்வுபூர்வமாக உங்களை
அண்ணா என்று வாஞ்சையோடு அழைத்து
உங்களுடன் பழகிய அந்த நாட்களை
எண்ணி வியக்கிறேன்,விம்முகிறேன்
தள்ளாத வயதிலும் ஓய்வுக்கே ஓய்வு!
என்பதன் அர்த்தத்தை “உழைப்பு”
என்று மாற்றிக்காட்டிய ஒப்பற்றே தலைவரே!

அந்தி சாயும்பொழுது ஒரு சூரியன் மறைவது இயற்கை.
ஆனால் 07.08.2018 அன்று மாலை 6.10 மணியளவில்
இரு சூரியன் ஒரு சேர மறைந்ததோ!
என்று என்னும் வண்ணம், இவ்வுலகையே இருட்டாக்கியது
போன்ற ஒரு உணர்வை தந்து சென்றவரே!

உங்கள் உடல் இவ்வுலகை விட்டு பிரிந்தாலும்,
உங்கள் சரித்திரம் சகாப்தமாய் என்றும்
எங்களுடனேயே இருக்கும்
உங்களை வணங்குகிறேன்.

உங்களின் நினைவாக என்றன்றும்…

தமிழன் என்று சொல்லடா!
தலை நிமிர்ந்து நில்லடா!

என்ற உங்கள் வாசகத்துடன்.

இப்படிக்கு உங்கள் விஜி என்னும் விஜயகாந்த்.

என்று கருணாநிதிக்கு எழுதிய நினைவு கடிதத்தில் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க