August 8, 2018
தண்டோரா குழு
திமுக தலைவர் கருணாநிதி பயன்படுத்திய வந்த நாற்காலி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் நேற்று மாலை காலமானார். இதையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டது. அங்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர்,லட்சக்கணக்கான தொண்டர்கள் கண்ணீர் மல்க கருணாநிதியின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு துவங்கியது. தற்போது பாசத்தம்பி அண்ணா நினைவிடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், கருணாநிதி உடல்நலக்குறைவால் இருக்கும் போது கடந்த சில வருடங்களாக அவர் பயன்படுத்தி வந்த சக்கர நாற்காலியின் புகைபடம் சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வருகிறது.இதனால் தொண்டர்கள் அந்த புகைப்படம் படத்துடன் உருக்கமான வரிகளில் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.