• Download mobile app
16 Dec 2025, TuesdayEdition - 3597
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கருணாநிதி இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த பிக்பாஸ் போட்டியாளர்கள்

August 8, 2018 தண்டோரா குழு

திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு உலகமெங்கும் வாழும் தமிழக மக்கள்
இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரோமோ வெளியானது. அதில், பிக்பாஸ் தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி நேற்று மாலை இறந்ததாக தெரிவித்தார்.இதனைக்கேட்டு பிக்பாஸ் போட்டியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அவருடைய ஆன்மா சாந்தியடைய அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துமாறு பிக்பாஸ் தெரிவிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றது.

இதற்கிடையில், தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியானது. அதில், கருணாநிதியின் மறைவை கேட்டு மகத் கண் கலங்குகிறார். இதனையடுத்து, டேனியல் கலைஞரின் பிரபலமான வசனத்தை பேசுகிறார். இதைத்தொடர்ந்து பாலாஜி, தமிழ் என்று சொன்னாலே நமக்கு ஞாபகம் வருவது அந்த கருப்பு கண்ணாடியும், மஞ்சள் துண்டும் தான் என கலைஞரை குறிப்பிட்டு பேசுகிறார்.

மேலும் படிக்க