August 7, 2018
தண்டோரா குழு
கருணாநிதி மறைவையொட்டி டெல்லி உட்பட நாடு முழுவதும் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும்,முன்னாள் முதல்வரும்,திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார்.
இதற்கிடையில்,தமிழக அரசு சார்பில், திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி நாளை அரசு விடுமுறை என்றும்,அடுத்த 7 நாட்களுக்கு அதாவது ஒருவாரம் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.
இந்நிலையில்,கலைஞர் மறைவையொட்டி நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.மேலும்,அரசு அலுவலகத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் மத்திய அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.