• Download mobile app
20 Dec 2025, SaturdayEdition - 3601
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சட்டத்தைப் பார்க்காதீர்கள் சரித்திரத்தைப் பாருங்கள் மெரினாவில் கலைஞருக்கு இடம் கொடுங்கள் – வைரமுத்து

August 7, 2018

சட்டத்தைப் பார்க்காதீர்கள் சரித்திரத்தைப் பாருங்கள் மெரினாவில் கலைஞருக்கு இடம் கொடுங்கள் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அவருடைய மறைவுக்கு பிரதமர்,குடியரசுத் தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மெரினாவில் அடக்கம் செய்வதற்கு அனுமதி கேட்டனர்.இந்தக் கோரிக்கையை பரிசீலிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில்,நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க இயலவில்லை என்றும்,காமராஜர் நினைவகத்துக்கு அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு தயாராக உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதனால் திமுக தொண்டர்கள் வேண்டும் வேண்டும் மெரீனா வேண்டும் என காவிரி மருத்துவமனை முன்பு கோஷம் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில்,கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“கலைஞருக்குக் கடற்கரையில் இடம் கொடுங்கள்.சட்டத்தைப் பார்க்காதீர்கள்;அவர் சரித்திரத்தைப் பாருங்கள்”எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க