August 7, 2018
தண்டோரா குழு
திமுக தலைவர் கலைஞர் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இன்று மாலை காலமானார்.
இதையடுத்து அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் திமுக தலைவர் கலைஞர் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
“சூரியன் முழுமையாக அஸ்தமித்தது.தமிழ் தன்னுடைய முடிவுரையை எழுதியது.ஒப்பாரும் மிக்காரும் இல்லா தலைவா உங்களுடைய இழப்பு காலத்தால் ஈடு செய்ய முடியாதது.இனி எப்படி கேட்பேன் அந்த காந்த குரலை கலைஞர் ஐயா.முத்தமிழின் மூத்த மகனுக்கு என் வீர வணக்கங்கள்” என பதிவிட்டுள்ளார்.