August 7, 2018
தண்டோரா குழு
கழக உடன்பிறப்புகள் கட்டுப்பாடுக் காத்திட வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும்,முன்னாள் முதல்வரும்,திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார்.இதையடுத்து அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.கருணாநிதி இறந்த செய்தியை கேட்டு தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் கதறி அழுது வருகின்றனர்.
இந்நிலையில்,கழக உடன்பிறப்புகள் கட்டுபாடுக் காத்து,தலைவர் கலைஞர் அவர்களின் நீங்காப் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்க செய்திடுக!என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.