August 7, 2018
தண்டோரா குழு
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முத்லவரும் திமுக தலைவருமான கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 11 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில்,சிகிச்சை பலனின்றி அவரது உயிர் இன்று மாலை 6.10 மணியளவில் பிரிந்ததது காவிரி மருத்துவமனை அறிவித்தது.இதையடுத்து கருணாநிதியின் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில்,
“என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள்.அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும் எனக் கூறியுள்ளார்”.