• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கைத்தறி கண்காட்சி துவக்கம்

August 7, 2018 தண்டோரா குழு

தேசிய கைத்தறி நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 7 -ம் தேதி கொண்டாடப்படுகிறது.கைத்தறிப் பொருட்களின் பயன்பாட்டின் முக்கியத்துவமும்,நாட்டின் சமூக பொருளாதார முன்னேற்றத்துக்கு கைத்தறித்துறையின் பங்களிப்பைக் வலியுறித்தியும் தேசியக் கைத்தறி நாள் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் விவசாயத்துறைக்கு அடுத்தபடியாக கைத்தறித்துறையே ஏழை மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் முக்கியத்துறையாக விளங்குகிறது.மேலும் சுற்றுச்சூழலுக்கும் கைத்தறிப் பொருட்களே உகந்தது.

கைத்தறி பொருட்களின் பயன்பாட்டை இளைய தலைமுறைக்கும்,மக்களுக்கும் ஊக்கப்படுத்தும் நோக்கில் கோவை மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்காட்சி மற்றும் விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

பின்னர் கண்காட்சியில் இடம் பெற்றிருந்த கைத்தறி வகைகளை பார்வையிட்டர்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிசந்திரன்,துணை ஆட்சியர் (பயிற்சி)ஸ்நேகா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

பின்னர் முத்ரா திட்டத்தின் கீழ் கைத்தறி தனி நபருக்கான கடன் 50 ஆயிரம் வீதம் 16 பேருக்கு வழங்கப்பட்டது.இக்கண்காட்சியில் கோவை காட்டன்,நெகமம் காட்டன்,கோரா,பட்டு. பெட்ஷீட், துண்டு சுடிதார் வகைகள் ஆர்கானிக் காட்டன் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. குறைந்த பட்சம் 1000 முதல் 6000 ரூபாய் வரையிலான சேலைகள் விற்பனைக்கு வைக்கபட்டிருந்தது.

தேசிய அளவில் விருது பெற்ற அகிம்சா பட்டு,மரத்தில் இந்திய தலைவர்கள் உருவம் பொருத்த சேலை மற்றும் தஞ்சாவூர் அருகே கோடாலி கருப்பூர் என்ற கோவிலின் கோபுர டிசைன் மூலம் உருவாக்கபட்டு 1988ல் ஜனாதிபதி விருது பெற்ற சேலை என பல்வேறு வகையான கைத்தறி சேலைகள் இடம் பெற்று இருந்தன.

இக்கண்காட்சி குறித்து வெள்ளலூர் நெசவாளர் கூட்டறவு சங்க மேலாளர் கூறுகையில்,

“இந்தாண்டு விற்பனைக்கு வைக்கபட்டுள்ளவை புதிய ரகங்கள் எனவும்,35 கூட்டுறவு சங்கங்களை சேர்ந்தவர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளதாக தெரிவித்தார்.கடந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் 90 லட்சத்திற்கு விற்பனை ஆனதாகவும் இந்தாண்டு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையாகும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.மேலும்,புதிய வடிவமைப்புகள் விற்பனை பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும்,சிறுமுகையில் தேவாங்கர் திருமண மண்டபத்திலும் நடைப்பெறுவதாக தெரிவித்தார்”.

மேலும் படிக்க