August 7, 2018
தண்டோரா குழு
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காவிரி மருத்துவமனையில் கடந்த 11 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையில்,காவிரி மருத்துவமனை நேற்று வெளியிட்ட அறிக்கையில்,கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும்,24 மணி நேரம் தீவிர கண்காணிப்பில் இருந்தால் மட்டுமே கூற முடியும் என தெரிவித்திருந்தது. இச்செய்தியை அறிந்த திமுக தொண்டர்கள் நேற்று முதல் மருத்துவமனை முன்பு குவியத் தொடங்கினர்.
இந்நிலையில், தற்போது கருணாநிதியின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில்,சில மணி நேரங்களாக கருணாநிதியின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க அளவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.மேலும்,அவரது உடலுறுப்புகளின் செயல்பாடுகள் மோசமாக உள்ளதாகவும்,சீரற்ற நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.இந்த செய்தியை கேட்டு காவேரி மருத்துவமனை முன் குவிந்துள்ள தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுது வருகின்றனர்.