August 7, 2018
திருப்பரங்குன்றம் தொகுதிக்கு தேர்தல் அறிவித்தவுடன் வேட்பாளர் குறித்து அறிவிப்போம் என ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் அமமுகவின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்,
“திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி அதிலிருந்து வெளியேறினால்,அவர்களுடன் கூட்டணி அமைப்பது குறித்து சிந்திப்போம். திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலை குறித்து வரும் தகவல்கள் தனக்கு கவலை அளிப்பதாகவும், அவர் முழு உடல் நலம் பெற பிரார்த்திப்பதாகவும் கூறினார்.
தமிழ்நாட்டில் 8 வழிச்சாலைத் திட்டம் தேவையற்றது. இயற்கை வளங்களை அழிக்கும் எட்டு வழிச் சாலைத் திட்டத்தை எதிர்த்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடர்ந்து போராடும்”. என்று கூறினார்