August 7, 2018
கோவையில் ஓட்டுநர் உரிமம் இல்லாத சிறுவனிடம் வாகனத்தை கொடுத்து கொசு மருந்து அடிக்கும் பணியை பஞ்சாயத்து செயலர் கொடுத்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோவை தொண்டாமுத்தூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசுவை ஒழிப்பதற்காக கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தொண்டாமுத்தூரில் இருந்து கெம்பனூர் செல்லும் வழியிலுள்ள அருள்ஜோதி நகரில்,சோமயம்பாளையத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் கொசு மருந்து அடித்துக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் தனக்கு 17 வயதாவதாகவும் தொண்டாமுத்தூர் பஞ்சாயத்து செயலர் சுந்தரம், ஒப்பந்த அடிப்படையில் பணியை தனக்கு கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இரு சக்கர வாகனம் ஓட்டுவதற்கு உரிமம் இல்லாமல், தலைகவசம் அணியாமல் பணி செய்யும் இந்த இளைஞரை பணியில் அமர்த்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆரவலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும்,இது போன்று சிறுவனிடம் வாகனத்தை கொடுத்து பணி செய்ய கூறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.