August 7, 2018
தண்டோரா குழு
கோவை திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே அனைத்து ஆட்டோ தொழிற்சங்கத்தினர்,மத்திய அரசின் போக்குவரத்து சட்ட திருத்தத்தை எதிர்த்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் போக்குவரத்து சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும்,பெட்ரோல்,டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும்,காப்பீடு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்களும்,தமிழகத்தில் 3 லட்சம் ஆட்டோ ஒட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கள் இணைந்து நடத்தும் இந்த போராட்டத்தில் கோவை மாவட்டம் சார்பில் 12 தொழிற்சங்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.இதனிடையே வேலைநிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து தொழிற்சங்கத்தை சார்ந்த ஆட்டோ ஓட்டுநனர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தின் போது மத்திய அரசின் போக்குவரத்து சட்ட திருத்தத்தை எதிர்த்து கோஷமிட்டனர்.
இந்த போராட்டம் குறித்து தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளனம் மாநில துணைத்தலைவர் மற்றும் கோவை மாவட்ட பொதுச்செயலாளர் சுகுமாரன் கூறுகையில்,
“நாடு முழுவதும் வாகனம் இயக்கும் தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளனர்.இதில் தமிழகத்தில் மூன்று லட்சம் ஆட்டோ ஒட்டுநர்கள் இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளனர்.
விபத்து என்பது எதிர்பாரத விதமாக நடைபெறுவது.இந்த சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டால்,விபத்து நடந்தால் நேரடியாக ஒட்டுநனர் சிறை செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.மேலும் அபராதமும் காப்பீடு இல்லாமல் ஒட்டுநர்களே கட்ட நேரிடும்.இது தொழிலாளர்களின் குடும்பங்களை முற்றிலும் பாதிக்கும்.
மேலும்,15 வருடங்களுக்கு ஒருமுறை பழைய வாகனத்தை விற்க வேண்டிய சூழல் உருவாகும். இரண்டு ஆட்டோக்களை வைத்து ஓட்டுபவர்களின் நிலைமை கவலைக்கிடமாக மாறும் என குற்றம் சாட்டினார்.
கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக இரு சக்கர வாகன மெக்கானிக்குகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.வாகன உதிரிபாகங்களின் கடைகள் இதனால் அழிவதோடு,சிறு குறு தொழிலும் அழியும் சூழ்நிலையை உருவாக்கும்.எனவே மத்திய, மாநில அரசுக்கள் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து விலை உயர்வை குறைக்க வேண்டும்”.இவ்வாறு கூறினார்.
மேலும்,சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 100க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.