August 7, 2018
தண்டோரா குழு
திருச்சி விமான நிலைய சுங்கத்துறை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணனின் கோவை வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
திருச்சி விமான நிலையத்தில் தங்க கடத்தலுக்கு உதவிய அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் சுங்கத்துறை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான வீடு கோவையில் உள்ளது. இதையடுத்து, கோவைப்புதூர் பகுதியில் உள்ள ஸ்ரீ வட்சா அபார்ட்மெண்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.