August 6, 2018
தண்டோரா குழு
தமிழ்நாட்டின் கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும் ஒரு பெரிய வரலாறு உண்டு என உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ள நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியுள்ளார்.
1985-ம் ஆண்டு வழக்கறிஞராகப் பதிவு செய்த நீதிபதி இந்திரா பானர்ஜி, கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.பின்னர் 2016-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணிமாற்றம் செய்யப்பட்டார். 2017 ஏப்ரல் 5-ம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக செயல்பட்டு வந்தார். நாளை உச்சநீதிமன்ற நீதிபதியாக அவர் பதவி ஏற்க உள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அவருக்கு பிரிவு உபாசார விழா நடத்தப்பட்டது.
அவ்விழாவில் பேசியா நீதிபதி இந்திரா பானர்ஜி,
நீதிமன்றம் எனக்கு கோயில் போன்றது. கோயில் எப்படி செயல்பட வேண்டுமோ அப்படிதான் நானும் செயல்பட்டேன். எந்த அச்சமும், யாருக்கும் அடிபணியாமலும் கடமையை செய்திருக்கிறேன்.தான் தனிப்பட்ட கோரிக்கைகளை யாரிடமும் இதுவரை வைத்தது இல்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்துவரும் பணிகள் எதுவும் தாமதமாக கூடாதுநான் உச்சநீதிமன்றம் சென்றாலும் தமிழகத்தை மறக்க மாட்டேன். சென்னை உயர்நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்கது. நீதிமன்றங்களிலேயே மிகச்சிறந்தது சென்னை உயர்நீதிமன்றம் தான். சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் திறமைமிக்கவர்கள். பாரம்பரிய கலாச்சாரங்களை கொண்ட தமிழகத்தில் மக்கள் எளிமையானவர்களாக உள்ளனர்.தமிழக மக்கள் பாரம்பரியத்தையும், மத நம்பிக்கையையும் பின்பற்றி வருகின்றனர். சில தீர்ப்புகளை என்னால் இன்றும் வழங்க முடியாமல் போனது. கனத்த இதயத்துடன் சென்னையிலிருந்து விடைபெறுகிறேன்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.