தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் தற்போது‘சீம ராஜா’ என்னும் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ்பிக்ஷன் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதற்கிடையில், சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ரஜேஷ் இயக்கத்தில் பெயர் சூட்டப்படாத படத்தில் நடிக்கவுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பும் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கவுள்ளார். காமெடி நடிகர் சதீஷ், யோகி பாபு ஆகியோரும் நடிக்கவுள்ளார்.இந்நிலையில், இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கவுள்ளார் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் 12 வது பட்டமளிப்பு – 700 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர்
பழங்குடியின பெண்களை வரி செலுத்துவோர்களாக உயர்த்திய ஈஷா வளர்ந்த பாரதத்திற்கு வழிவகுக்கும் முன்னெடுப்பு – பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் பாராட்டு
ஜனவரி மற்றும் ஜூன் 2025 க்கு இடையில் 36,194 வாகனங்களை விற்பனை செய்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா சாதனை
தமிழ்நாடு அரசு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வை விளக்கிக் கொள்ள வேண்டும் ! தமிழக தொழில் அமைப்புகளின் வேண்டுகோள்!!
ஜெர்மனியில் சத்குருவிற்கு வழங்கப்பட்ட “ப்ளூ டங்” விருது
இந்திய போட்டித் துறை ஆணையம் (CCI), ஆசியான் பேயிண்ட் கம்பெனிக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவு