August 6, 2018
தண்டோரா குழு
கோவை வால்பாறை டவுன் பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை வால்பாறை டவுன் பகுதிகளில் கடந்த சில தினங்களாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு வால்பாறை அஞ்சல் அலுவலகம் பகுதியில் சிறுத்தை நடமாடுவது அங்கிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது.இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதையடுத்து,வால்பாறை டவுன் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகிரித்துள்ளதால் சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இதையடுத்து வனத்துறையினர் அங்கு ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.