August 4, 2018
தண்டோரா குழு
கோவை கணுவாயிலுள்ள டி எஸ் மளிகை கடையில் முகமூடி அணிந்து வந்து திருடிய கொள்ளையனை காவல்துறை தேடி வருகின்றனர்.
கணுவாய் வி.எம்.டி நகரில் திருநேல்வேலியைச்சேர்ந்த தங்கராஜா என்பவருக்கு சொந்தமான டி.எஸ் அரிசி மற்றும் மளிகை கடை உள்ளது.இந்நிலையில் நேற்றிரவு இரண்டு மணிக்கு மளிகை கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே இறங்கிய திருடன் கள்ளப்பெட்டியில் இருந்த 25 ஆயிரம் ரூபாயை திருடிச்சென்று உள்ளான்.
மேற்கூரையில் இருந்த இரும்பு செயினின் உதவியால் உள்ளே புகுந்தவன் முகத்தை மூடிக்கொண்டு தலைக்கு தொப்பி அணிந்து அடையாளம் தெரியாத வண்ணம் வந்து திருடிச்செல்லும் காட்சிகள் சி.சி டிவியில் பதிவாகியுள்ளன.
காலையில் கடை திறக்க வந்த தங்கராஜா கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு பணம் 25 ஆயிரம் ரூபாய் கொள்ளை போயிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனையடுத்து வடள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.