August 4, 2018
தண்டோரா குழு
திமுக தலைவர் கருணாநிதியை நலம் விசாரிக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு காவிரி மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த ஜூலை 27ம் தேதி ஏற்பட்ட திடீர் ரத்த அழுத்தம் குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.அவருக்கு மருத்துவக் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.தற்போது அவரின் உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கருணாநிதியின் உடல்நிலையை விசாரிக்க இன்று மதியம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு காவிரி மருத்துவமனைக்கு வருகை தந்தார்.பின்னர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்.