August 4, 2018
தண்டோரா குழு
சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக தகில் ரமணியை மத்திய அரசு நியமித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி பணியாற்றி வருகிறார்.அவருக்கு,உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு அளிக்குமாறு கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.இந்நிலையில்,சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி பதவிக்கு தஹில்ரமணி பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக செயல்பட்டு வந்த இந்திரா பானார்ஜி,உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணி உயர்வு பெற்று செல்கிறார். இதையடுத்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பணியாற்றிக் கொண்டிருந்த விஜயா கமலேஷ் தஹில் ரமணி,தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக செயல்பட இருக்கிறார்.
இவர் கடந்த 1982ம் ஆண்டு மும்பை மற்றும் கோவாவில் வழங்கறிஞராகவும்,2001-ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றினார்.மேலும்,சென்னை உயர் நீதிமன்றத்தின் 2-வது பெண் தலைமை நீதிபதியாக விஜயா கமலேஷ் தஹில்ரமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.