• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவுக்கு 194 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்கு

August 4, 2018

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 194 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதில் பர்மிங்ஹாமில் துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட்,முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

இதில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 287 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற கேப்டன் கோலி மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டெஸ்ட் அரங்கில் தனது 22வது சதத்தை பூர்த்தி செய்தார்.இந்திய அணி 274 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 13 ரன்கள் பின்தங்கியிருந்தது.

இந்நிலையில் மூன்றாவது நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணி இஷாந்த் வேகத்தில் தடுமாறியது.இங்கிலாந்து அணியில் ஷாம் கரன் (63) மட்டும் அரைசதம் அடிக்க, இரண்டாவது இன்னிங்சில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.இதன் மூலம் இந்திய அணிக்கு 194 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

எட்டக்கூடிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு முரளி விஜய் (6),தவான் (13)ஆகியோர் மீண்டும் ஏமாற்றமான துவக்கம் அளித்தனர்.பின்னர் களமிறங்கிய ராகுல் (13),ரகானே (2) சொதப்பலாக வெளியேறினர்.

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும்,மறுமுனையில் கேப்டன் கோலி நிதானமாக ஆடினார்.மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி,இரண்டாவது இன்னிங்சில்,5 விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்துள்ளது.

மேலும் படிக்க