August 3, 2018
தண்டோரா குழு
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க நாளை மறுநாள் (ஆகஸ்ட் 5)ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வரவுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார்.இதற்கிடையில்,கடந்த ஜூலை 27-ம் தேதி இரவு கருணாநிதிக்கு ரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டதால் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து,குடியரசுத் துணைதலைவர் வெங்கய்யா நாயுடு,காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மலேசியா சட்டமன்ற உறுப்பினர்,தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தமிழ் திரையுலக நடிகர்கள்,கேரளா முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலரும் சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்றிந்தனர்.
இந்நிலையில்,திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவிரி மருத்துவமனைக்கு நாளை மறுநாள்(ஆகஸ்ட் 5)ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வருகிறார்.இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.