August 3, 2018
தண்டோரா குழு
ஆடிப் பெருக்கை முன்னிட்டு தென் மாவட்டம் மற்றும் திருச்சி,கும்பகோணம் தஞ்சாவூர் பகுதிகளுக்கு செல்ல போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
ஆடிப் பெருக்கை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக கோவையில் உள்ள சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களில் குவிந்தனர்.இங்கு இருந்து தான் தென் மாவட்டங்களான திருச்சி,தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இந்நிலையில் ஆடிப் பெருக்கிற்காக சொந்த ஊர் செல்ல பொதுமக்கள் ஒரே நேரத்தில் குவிந்தததால் பேருந்துகள் கிடைக்காமல் பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருந்தனர்.இதனால் பேருந்துகள் கிடைக்காமல் தனியார் டெம்போக்கள் மற்றும் பிற வாகனங்களில் பொதுமக்களை ஏற்றி சென்றனர்.
இதனால்,அதிக தொகை கொடுத்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.இது போன்ற பண்டிகை காலங்களில் அதிக பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.