August 2, 2018
தண்டோரா குழு
தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பிற தாய்மார்கள் தாய்ப்பாலை தானமாக வழங்கினர்.
தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 ஆம் தேதியில் இருந்து 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் கோவையில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் தாய்ப்பால் தானம் வழங்கப்பட்டது.
கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளின் தாய்மார்கள் சிலருக்கு பால் குறைந்த அளவிலேயே வருவதால்,அந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதால் அந்த குழந்தைகளுக்கு தொண்டு நிறுவனத்தை சேர்ந்த தாய்மார்கள் தாய்ப்பாலை நேரடியாக வழங்கினர்.
இதனால் எந்த குழந்தைகளும் தாய்ப்பால் குடிக்காமல் இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் இந்த தாய்ப்பால் தான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.மேலும் தங்களுடைய குழந்தைகள் அல்லாத மற்ற குழந்தைகளுக்கு நேரடியாக தாய்ப்பால் வழங்கிய தாய்மார்களும் நெகிழ்ச்சி அடைந்தனர்.