August 2, 2018
தண்டோரா குழு
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் செயல் தலைவர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்.
திமுக தலைவர் மு.கருணாநிதி ரத்த அழுத்த குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.அவரது உடல்நலம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நலம் விசாரித்து வருகின்றனர்.தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி தேசிய தலைவர்களும் அவரது உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில்,திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனையில் ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கேரள முதல்வர் பினராயி விஜயன் நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேரளா முதல்வர்,
“பிறவி போராளியான திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.அவர் விரைந்து பூரண குணமடைய வேண்டுகிறேன்”.என்றுக் கூறினார்.