August 2, 2018
தண்டோரா குழு
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ஏ.கே.போஸ் மாரடைப்பால் நேற்றிரவு காலமானார்.
2016-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஏ.கே.போஸ்(69).
கடந்த ஓராண்டாக உடல் நலக்குறைவால் இருந்த ஏ.கே.போஸ்க்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் கால் மூட்டு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில்,ஏ.கே.போஸ்க்கு நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தற்போது,மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஏ.கே.போஸ் உடல் வைக்கப்பட்டுள்ளது.இன்று மாலை 5 மணிக்கு இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.