• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டிய 5 வயது சிறுமி – தந்தையின் ஓட்டுநர் உரிமம் ரத்து

August 1, 2018 தண்டோரா குழு

கேரளாவில் ஐந்து வயது சிறுமி இருசக்கரவாகனம் ஓட்டியதால்,தந்தையின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொச்சி அருகேயுள்ள நெடுஞ்சாலையில் ஒருவர் குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது தனது ஐந்து வயது மகளை இருசக்கர வாகனம் ஓட்ட அந்த நபர் அனுமதித்துள்ளார்.அந்த சிறுமி வாகனம் ஓட்ட,அவளுடைய தந்தை,தாய் மற்றும் சகோதரி அதில் பயணித்தனர்.இந்த காட்சியை அந்த வழியாக காரில் சென்ற ஒருவர் பதிவு செய்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவியதால் சர்ச்சை எழுந்தது.

இதையடுத்து,வாகனத்தின் பதிவெண் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் சிபு பிரான்சிஸ் என்பவர் தனது ஐந்து வயது மகளை வாகனம் ஓட்ட வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால்,அவரது ஓட்டுநர் உரிமத்தை எர்ணாகுளம் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் ரத்து செய்தனர்.மேலும்,சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு தான் தண்டனை அளிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

மேலும் படிக்க