August 1, 2018
தண்டோரா குழு
வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இன்று ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு பருவமழை வலுப்பெற்று வரும் நிலையில் கன்னியாகுமரி,நீலகிரி,கோவை,தேனி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் ஒர் இரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும்,தென்மேற்கு, மேற்கு திசையிலிருந்து மணிக்கு 25-45 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் தென் தமிழக மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யலாம்.