August 1, 2018
தண்டோரா குழு
கோவையிலிருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற கார் தனது கட்டுப்பாட்டை இழந்து எதிரே நின்று கொண்டு இருந்த ஆட்டோ மீது மோதி,பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் மீது மோதியதில் ஏழு பேர் பலி உயிரிழந்தனர்.
கோவை பொள்ளாச்சி சாலையிலுள்ள சுந்தராபுரம் ஐயர் மருத்துவமனை அருகே அதிவேகமாக ஆடி கார் ஒன்று வந்துள்ளது.அப்போது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே நின்று கொண்டு இருந்த ஆட்டோ மீது மோதி பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்கள் 10 பேர் மீது மோதியது.இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதனையடுத்து படுகாயமடைந்தவர்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில்,விபத்துக்குள்ளான இந்த கார் கோவை ஈச்சனாரியிலுள்ள ரத்தினம் கல்லூரியின் உரிமையாளரின் கார் எனத் தெரிய வந்துள்ளது.காரை ஓட்டி வந்த ஜெகதீஷ் மயக்கம் ஏற்பட்டு கார் தனது கட்டுப்பாட்டை இழந்ததாக கூறியுள்ளார்.இந்நிலையில்,கார் ஓட்டுனரை பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததில் காயமைடந்த அவருக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.