July 31, 2018
திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் பார்த்த போது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக மருத்துவகண்காணிப்பில் இருந்து வந்தார்.இதற்கிடையில்,கடந்த ஜூலை 27-ம் தேதி இரவு கருணாநிதிக்கு ரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டதால் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று சென்னை வந்தடைந்தார்.பின்னர்,சென்னை விமான நிலையத்திலிருந்து காவேரி மருத்துவமனைக்கு வந்த ராகுல் காந்தி கருணாநிதியின் உடல்நிலை குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்.அவருடன் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்,தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் சென்றனர்.
இந்நிலையில் கருணாநிதி சிகிச்சைபெறும் 2 ஆவது புகைப்படத்தை திமுக தலைமை செயலகம் வெளியிட்டுள்ளது.அதில்,திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் காதில் ஏதோ கூறுகிறார்.இந்தப் படத்தில் கருணாநிதியின் முகம் மிகத் தெளிவாக உள்ளது.அவரது முகத்தில் எந்த சுவாசக்கருவியும் இல்லை. ந்தப் புகைப்படத்தில் ராகுல் காந்தி,டாக்டர் கோபால்,தயாநிதி மாறன் ஆகியோர் உள்ளனர்.
காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்ட பிறகு வெளியாகியுள்ள 2வது புகைப்படம் இது.இதற்கு முன் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு,ஆளுநர் பன்வரிலால் புரோஹித் ஆகியோர் நேரில் போய் பார்த்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது.
ஆனால்,அந்த புகைப்படத்தில் கலைஞரின் முகம் சரியாக தெரியவில்லை.அதைபோல், இந்த புகைப்படத்தை பார்க்கும் போது முன்பை விட திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.இதனால் கருணாநிதியின் உடல்நிலை குறித்த வந்த தகவல்களுக்கு இந்த புகைப்படம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.