July 31, 2018
தண்டோரா குழு
பாரதியார் பல்கலைக்கழகம் விரிவாக்கம் மற்றும் வேலை வழிகாட்டி துறையின் முதுகலை படிப்பிற்கான எம்.ஏ.கேரியர் கய்டன்ஸ் இரண்டாண்டு பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்காலம்.
இத்துறையில் வழங்கப்படும் மாஸ்டர் ஆப் கேரியர் கய்டனஸ்(Master of Carrer Guidance)இரண்டாண்டு படிப்பில் மாணவர்களின் திறன் அறிதல்,திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல்,மேற்கொண்டு என்ன படிக்கலாம்,என்ன வேலைக்குச் செல்லலாம் என்ற கேள்விகளுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் பன்னாட்டு பாடத்திட்டத்தை ஆராய்ந்து இன்றைய சுழ்நிலைக்கு ஏற்றவாறு பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும்,3 மாத கால வழிகாட்டி ஆலோசனை களப்பயிற்சி வழங்கப்படுகிறது.இந்தியாவிலே பாரதியார் பல்கலைக்கழகத்தில் மட்டும் வழங்கப்படும் இந்த பட்டப்படிப்புக்கு விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்காலம்.கல்வி தகுதி ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வெற்றிகரமாக முடித்தவர்கள் பள்ளி கல்லூரிகளில் வேலை வழிகாட்டி(Career Counsellor), வேலைவாய்ப்பு இயக்குனர்,மனித வள மேம்பாட்டு பயற்சியாளர் கல்வியியல் ஆலோசகர் சுட்சும
பயிற்சியாளர்(Aptitude Coach)உள்ளிட்ட தகுதிகளை மேற்கொள்ளலாம்.
விண்ணப்பத்தினை பல்கலைக்கழக இணையதளத்திலோ www.b-u.ac.in நேரடியாக விரிவாக்கம் மற்றும் வேலை வழிகாட்டி துறையிலோ பெற்று 10.08.2018க்குள் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
விரிவாக்கம் மற்றும் வேலைவழிகாட்டித்துறை,பாரதியார் பல்கலைக்கழகம் கோவை-641046. தொலைபேசி எண்:0422-2424600,0422-2428237,0422-2428239.
குறிப்பு:ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் அந்தந்த ஆலோசகர்களால் இத்துறையில் மாணவர்களுக்கு முன்பதிவின் பெயரில் கல்வி சார்ந்த எதிர்கால வேலை சார்ந்த தக்க
ஆலோசனை இலவசமாக வழங்கப்படுகிறது.