July 31, 2018
தண்டோரா குழு
சி.ஏ தேர்வில் அகில இந்திய அளவில் இரண்டாமிடம் பெற்று பொறியல் பட்டதாரி சாதனை படைத்துள்ளார்.
இந்தியா முழுவதும் 34,000 பேர் பட்டய கணக்காளர் தேர்வு எழுதினர்.அதில் ஒரு சதவிகிதத்தினர் மட்டுமே,அதாவது 340 பேர் மட்டுமே பட்டய கணக்காளர் தேர்வில் இந்திய அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இந்த தேர்வில் கோவையைச் சேர்ந்த லஷ்மணன் என்பவர் அகில இந்திய அளவில் இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து லஷ்மணன் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில்,
“நான் பொறியியல் பட்டம் படித்துள்ளேன்.பட்டயகணக்குக்கு சம்பந்தமில்லாத பாடம் படித்து விட்டு அகில இந்திய அளவில் இரண்டாவது இடம் பெறுவதற்கு முயற்சியும்,ஆர்வமும் இருந்தாலே போதும் என தெரிவித்தார்.தன்னுடைய தந்தை ஆடிட்டராக பணிபுரிந்து வருவதாகவும் அவருடைய விருப்பத்தின் பேரில் படித்ததாகவும் அனைத்தையும் தெரிந்துகொள்ள பட்டய கணக்காளர் பணி உதவும் என தெரிவித்தார்.
மேலும்,பெஸ்ட் அகடாமியின் பயிற்சியில் பொறியியல் பட்டதாரி,பட்டய கணக்கராக முடிந்தது.இந்த அகடாமியில் படித்த பரத் ராம் என்பவர் சி ஏ இண்டர்மீடியட்டில் அகில இந்திய அளவில் 49 வது இடம் பெற்றுள்ளார்.இது தவிர சி.ஏ பவுண்டேசன் தேர்வில் அகில இந்திய அளவில் 21 வது இடமும் பெற்று பெஸ்ட் அகடாமியைச் சேர்ந்த மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்”.