• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் நான்கு பேரிடம் வீடியோ காலிங் பேசும் வசதி அறிமுகம்

July 31, 2018 தண்டோரா குழு

ஒரே நேரத்தில் நான்கு பேரிடம் பேசும் குரூப் வீடியோ- ஆடியோ காலிங் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

உலகம் முழுவதும் அதிகம் மக்களால் பயன்படுத்தப்படும் குறுஞ்செய்தி செயலியில் வாட்ஸ் அப் முதலிடத்தில் உள்ளது.இதற்கு ஏற்ப அந்நிறுவனமும் பயனாளர்களுக்கு ஏற்ப பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது.தற்போது வரை வாட்ஸ் அப் குறுஞ்செய்தி மற்றும் வீடியோ ஆடியோ காலிங் பேசும் வசதி இருந்து வந்தது.

இந்நிலையில்,குரூப் வீடியோ மற்றும் ஆடியோ காலிங் சேவையை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.நீண்ட நாள் சோதனைக்குப் பிறகு ஒருவழியாக,இந்தியாவுக்கு வந்தது வாட்ஸ்அப் குருப் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை F8 டெவலப்பர்ஸ் மாநாட்டில் ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பரிசோதனை அளவில் இருந்த இந்த வசதி முதல் முறையாக,பயனாளர்கள் பயன்பாட்டுக்கு முழுமையாக கொண்டு வரப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் உள்ள ஆண்ட்ராய்டு, மற்றும் ஐஓஎஸ் இயங்கு தளத்தில் வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்தும் பயனாளர்கள் இந்த சேவையை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதியை இன்று முதல் அனைத்து போன்களிலும் பயன்படுத்தலாம்.இதைப்பயன்படுத்த விரும்புபவர்கள்தங்களின் பிளே ஸ்டோர் ஆப் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் சென்று புதிதாக வழங்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் வெர்ன்ஸனை அப்டேட் செய்ய வேண்டும்.

பின்னர்,வாட்ஸ்அப் வீடியோ காலின் வலது ஓரத்தின் மேலே உள்ள add participant பட்டனை அழுத்தினால் போதும்.நீங்கள் பேச விரும்புபவரை அதன்மூலம் தேர்ந்தெடுக்கலாம்.அதைபோல்,இந்த வீடியோ கால் வசதியும் end-to-end encryption முறையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம், மூன்றாவது நபர் உங்களின் செயல்களைப் பார்க்க முடியாது என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.ஒரே நேரத்தில்,அதிகபட்சமாக நான்கு பேருடன் மட்டுமே வாய்ஸ் மூலமாகவும் வீடியோ மூலமாகவும் பேச முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க