July 30, 2018
தண்டோரா குழு
திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் விவரம் கேட்டறிந்தார்.
திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனை வெளியே ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக காவிரி மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நேற்று முதலே ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளதால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
இதற்கிடையில், கருணாநிதி நலம் குறித்து விசாரிக்க இன்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் காவிரி மருத்துவமனைக்கு வந்தனர்.
இந்நிலையில், தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்திக்க ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அங்கு அவர் திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விவரம் கேட்டறிந்தார்.