July 30, 2018
தண்டோரா குழு
தமிழகத்தில் உள்ள பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளில் உள்ள, எம்பிஏ படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு கோவையில் உள்ள அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில் இன்று துவங்கியது.
தமிழகத்தில் உள்ள பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள, எம்பிஏ படிப்புகளில் டான்செட் மதிப்புகளின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது. அதன்படி இதற்கான தரவரிசை பட்டியல் கடந்த 20 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று எம்பிஏ படிப்புகளுக்கான கலந்தாய்வு கோவையில் உள்ள அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில் துவங்கியது. எம்பிஏ கலந்தாய்விற்காக மொத்தம் 6255 பேர் அழைக்கபட்டு உள்ளனர். வருகிற ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதற்காக மாணவர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து உள்ளதால் அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். முதல் முறையாக இந்த ஆண்டு முதல், டான்செட் தேர்வு எழுதி, எம் பி ஏ, படிப்பில் விண்ணப்பிக்க தவறிய மாணவர்களும், விண்ணப்பித்து கலந்து கொள்ள இயலாதவர்களும் கலந்தாய்வில் பங்கேற்கும் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தி உள்ளனர்.