July 28, 2018
தண்டோரா குழு
தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து,கோவை மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் மருத்துவமனைகள் 12 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாடு முழுவதும் 12 மணி நேர வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக கோவை நகரில் 400க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளும்,கோவை மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் சிறிய,பெரிய மருத்துவமனைகளும் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.
இம்மருத்துவமனைகளில் வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை.
உள்நோயாளிகளுக்கான சிகிச்சை,அவசர சிகிச்சை,அவசர அறுவை சிகிச்சை,பிரசவம் போன்றவை மட்டுமே பார்க்கப்படுகின்றன.இந்திய மருத்துவ சங்கத்தை கலைத்து மருத்துவர்கள் அல்லாதவர்களை கொண்டு தேசிய மருத்துவ ஆணையத்தை மத்திய அரசு அமைக்க முயல்வதை கைவிட வேண்டும் எனவும்,இப்போராட்டத்தில் கோவை மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரம் மருத்துவர்கள் பங்கேற்றுள்ளதாகவும் இந்திய மருத்துவ சங்கத்தினர் தெரிவித்தனர்.