July 28, 2018
தண்டோரா குழு
கோவையில் உள்ள 150 ஆண்டுகள் பழமையான மாச்சம்பாளையம் மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு இரண்டு லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
ஆடி மாதத்தில் வெள்ளிக்கிழமை சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.இந்த தினத்தில் அனைத்து பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.இந்நிலையில் கோவையை அடுத்த சுந்தராபுரம் பகுதியில் உள்ள மாச்சம்பாளையம் மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது .150 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுவது வழக்கம்
இந்நிலையில்,ரூ 2ஆயிரம்,ரூ.500,ரூ.100 நோட்டுக்களை கொண்டு மாரியம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.மொத்தம் 2 லட்ச ரூபாய்க்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்த மாரியம்மனை அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து வழிபட்டு சென்றனர்.