July 27, 2018
தண்டோரா குழு
நடிகர் விக்ரம் கோபாலபுரம் இல்லத்துக்கு நேரில் சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 3 நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக நேற்று அறிக்கை வெளியிட்ட காவிரி மருத்துவமனை நிர்வாகம்,சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாகவே காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக அவர் இப்போது வீட்டில் இருந்த படியே சிகிச்சை பெற்று வருகிறார்.நோய் தொற்று காரணமாக யாரும் அவரை நேரில் சந்திக்க வேண்டாம் என கூறியிருந்தது.
இதற்கிடையில்,நேற்று முதல் தமிழகத்தில் உள்ள பல அரசியல் தலைவர்களும் திமுக தொண்டர்களும்,கோபாலபுர இல்லத்தில் குவிந்த வண்ணமாக உள்ளனர்.இந்நிலையில்,கலைஞர் உறவு முறை என்பதால் நடிகர் விக்ரம் கோபாலபுரம் இல்லத்துக்கு நேரில் சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலினிடம் கேட்டறிந்துள்ளார்.திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மகன் மு.க முத்துவின் பேரனுக்கு,நடிகர் விக்ரம் தன் மகளை திருமணம் செய்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.