July 27, 2018
தண்டோரா குழு
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என புதியதாக பதவியேற்ற கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று பதிவியேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“கோவை மாவட்டத்தில் குழந்தை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.சாலை விபத்துக்கள் அதிகளவில் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.மேலும் கோவையில் தொடர்ந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டு வருவது குறித்து கேட்டதற்கு,தடை செய்யப்பட குட்கா வைத்து இருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்”.எனக் கூறினார்.