July 27, 2018
தண்டோரா குழு
தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு போய் லாட்டரி சீட்டுகளை வாங்கி வரும் இடைத்தரகர்கள் அதை தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டுகளுக்கு அடிமையாக இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் விலைக்கு(கமிஷன்) வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.இதை தடை செய்வதற்காக மாநகர போலீசார் தொடர்ந்து நடவடிக்கைகளிலும் சோதனைகளிலும் ஈடுபட்டு வந்தாலும் மறைமுகமாக பல்வேறு பகுதிகளில் ஏஜெண்டுகள் மூலம் விற்பனை செய்யபட்டுவருகிறது.
இந்நிலையில் புலியகுளத்தைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் லாட்டரி விற்பனையை தொடர்ந்து செய்து வரும் லாட்டரி விற்பனை ஏஜென்ட் மோகன்(62)என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் புலியகுளம் விநாயகர் கோயில் பின்புறம் சுமார் 35 ஆண்டு காலமாக பெட்டிக்கடை மற்றும் லாட்டரி வியாபாரம் செய்து வந்துள்ளார்.
பின்னர் தமிழக அரசால் இந்த லாட்டரி விற்பனையில் தடை செய்யப்பட்டது.ஆனால் மோகன் தொடர்ந்து புலியகுளத்தைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து லாட்டரி வியாபாரத்தை நடத்தி வந்தார்.இதை கண்டறிந்த கோவை மாநகர காவல் துறையினர் கடந்த மே மாதம் 2010 ஆம் ஆண்டில் பெட்டிக்கடை மோகனை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
பிறகு மீண்டும் சிறையில் இருந்து வெளியே வந்து சில நாட்கள் லாட்டரி வியாபாரத்தை நிறுத்திய மோகன் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக லாட்டரி வியாபாரத்தை அதிகப்படுத்தினார்.இதை மீண்டும் கண்டறிந்த போலீஸார் 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கைது செய்தனர்.இதில் அவரிடமிருந்த 350க்கும் மேற்பட்ட தடை செய்யப்பட்ட லாட்டரிகளை பறிமுதல் செய்ததுடன் அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.