July 27, 2018
தண்டோரா குழு
திமுக தலைவர் கருணாநிதி கம்பீர குரலில் மீண்டும் பேச வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில நாட்களாகவே,உடல் நலம் பாதிக்கப்பட்டு காணப்படுகிறார்.
இந்நிலையில் அவருக்கு வீட்டிலேயே மருத்துவமனை வசதிகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதற்கிடையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோபாலபுரம் சென்று,கருணாநிதி குறித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில்,தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கலைஞர் கருணாநிதி விரைவில் உடல் நலம்பெற்று,மீண்டும் பழைய கம்பீர குரலோடு தமிழ் வசனங்கள் பேச வேண்டும்.தமிழகத்தில் மீண்டும் அரசியல் பணிகள் செய்ய,நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருக்க தான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.