• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காஷ்மீர் விவகாரம் :இந்தியா ஒரு அடி முன்னோக்கி நகர்ந்தால், நாங்கள் இரு அடிகள் முன்னோக்கி வருவோம் – இம்ரான் கான்

July 26, 2018 தண்டோரா குழு

காஷ்மீர் பிரச்சினையை சுமூகமாக,பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க இந்தியா தரப்பில் ஒரு அடி முன்னோக்கி நகர்ந்தால்,நாங்கள் இரு அடிகள் முன்னோக்கி வருவோம் இம்ரான் கான் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் உள்ள 272 தொகுதிகளுக்கும் நேற்று நாடாளுமன்றத் தேர்தல் நடந்து,வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சி 76 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.43 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் ஷெரிஃப் கட்சி 43 இடங்களில் வெற்றி பெற்றதோடு,20 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 42 இடங்களில் முன்னிலை பெற்று 3வது இடத்தில் உள்ளது.

பாக்கிஸ்தானில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க ஒரு கட்சிக்கு 137 இடங்கள் தேவை. மாலை நிலவரப்படி 118 இடங்களில் வெற்றி பெற்று அடுத்த பிரதமராக பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவராக இம்ரான் கான் பொறுப்பேற்கவுள்ளார்.இந்நிலையில்,இம்ரான் கான் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

“நான் முதலில் கடவுளுக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன்.எனது 22 ஆண்டுக்கால உழைப்புக்குப் பலன் கிடைத்துவிட்டது.பாகிஸ்தான் குறித்து எனக்குக் கனவு இருந்தது.அந்த கனவை நிறைவேற்றக் கடவுள் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.கடந்த 1996-ம் ஆண்டு நான் கட்சி தொடங்கினேன்.எனக்கு மிகப்பெரிய ஆதரவு அளித்த பாகிஸ்தான் மக்களுக்கு இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவிக்கிறேன். இந்த நாட்டுக்காகச் சேவை செய்ய மக்கள் எனக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள்”.

மேலும் படிக்க