July 26, 2018
தண்டோரா குழு
செல்போன் செயலி மூலமாக குரல் அழைப்பு விடுக்கும் புதிய வசதியை கோவையில் முதல் முறையாக பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
பி.எஸ்.என்.எல் நிறுவனம் ‘விங்ஸ்’ எனப்படும் செயலியை அறிமுகம் கோவையில் முதல் முறையாக அறிமுகம் செய்துள்ளனர்.இந்த அறிமுக விழா கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் நடைபெற்றது.
விங்கஸ் எனப்படும் செல்போன் செயலி மூலமாக குரல் அழைப்பு விடுக்கும் வசதியும்,இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கிலும்,பிற நெட்வொர்க்கிலும் வரும் அழைப்புகளை மடிகணினி மற்றும் செல்போனில் இருந்து அழைக்கவும்,அழைப்புக்களை ஏற்கவும் முடியும் என தெரிவித்துள்ளனர்.
இந்த சேவைக்கான,முன் பதிவும் நேற்று முதல் துவங்கியுள்ளது.அறிமுக சலுகையாக இதற்காக 1099 ரூபாய் செலுத்தி,பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர் சேவை மையம் மூலம் இந்த சேவைக்காக முன் பதிவு செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் மூலமாக குறைந்த விலையில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளதால்,இந்த வருடம் மட்டும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் புதியதாக பி.எஸ்.என்.எல்லில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.