July 25, 2018
தண்டோரா குழு
தீரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்தி பாண்டிராஜ் இயக்கத்தில் கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் நடித்துள்ளார்.
சூர்யாவின் 2D என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சத்யராஜ்,சூரி,சாயிஷா, பிரியா பவானி ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.விவசாயத்தின் பெருமை மற்றும் கூட்டுகுடும்ப வாழ்க்கையை பற்றி பேசும் படம் என்பதால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதற்கிடையில்,இப்படத்தின் வெற்றி விழா இன்று நடைபெற்றது.இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.அப்போது,நடிகர் சூர்யா விவசாய மேம்பாட்டுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கினார்.இந்நிலையில் நடிகர் சூர்யா,கார்த்திக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
“அண்ணன் சிவகுமார் பெற்றெடுத்த
சிங்க மைந்தர்கள்
வேளாண்குடி மக்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கியதை வரவேற்கிறேன்; வாழ்த்துகிறேன். அன்பு சூர்யா! கார்த்தி! உங்களால் கலைக்குடும்பத்தின்
சமூகமதிப்பு உயர்ந்திருக்கிறது.
கலைத்தொண்டு தொடரட்டும்;
காலம் கைதட்டும்” எனக் கூறியுள்ளார்.