• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகள் பறிமுதல்

July 25, 2018 தண்டோரா குழு

கோவை விமான நிலையத்தில் மின்சாதன பொருட்களில் நூதன முறையில் கடத்தி வரப்பட்ட ரூ.34.10 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகளை மத்திய வருவாய்ப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கொழும்புவிலிருந்து கோவைக்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளை கோவை மண்டல மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து வந்தனர்.அப்போது,சந்தேகத்தின் பேரில் பயணிகள் இருவரின் உடமையை சோதித்த போது,அவர்கள் எடுத்து வந்த iron box,Sony TV ஆகிய பொருட்களில் வட்டம் மற்றும் சதுர வடிவில் மறைத்து எடுத்து வரபட்ட 1100 கிராம் எடைக் கொண்ட 20 தங்க கட்டிகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

தங்க கட்டிகளை எடுத்து வந்த பயணிகளான கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த முஹம்மது அலீப் (28),சென்னை தண்டியார்பேட்டையை சேர்ந்த அன்சாரி (38) ஆகிய இருவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தங்கம் மறைத்து எடுத்து வந்த iron box, TV ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.மேலும்,கைது செய்வதற்கான வரம்பு இல்லாததால் இருவரும் கைது செய்ய வாய்ப்பில்லை எனவும்,அபராதம் மட்டும் விதிக்கப்பட்டுள்ளதாக வருவாய்ப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க