• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வதந்திகளை நம்ப வேண்டாம் கருணாநிதி நலமுடன் உள்ளார் – ஸ்டாலின்

July 25, 2018 தண்டோரா குழு

தி.மு.க தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார் என தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலம் மோசமடைந்ததாக வதந்திகள் பரவியது.இந்நிலையில்,
தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கோபாலபுரத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின்,

“கருணாநிதியின் உடல்நிலை குறித்து வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.அவர் நலமுடன் இருக்கிறார்.சிகிச்சைக்கு பிறகு அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.அச்சப்படும் வகையில் எதுவும் இல்லை.ராணுவ விமானம் வழங்கியது தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் துணை முதல்வர் ஓ.பி.எஸும் பதில் அளிக்க வேண்டும்.தனிநபருக்கு ராணுவ ஹெலிகாப்டர் வழங்கிய தகவல் இப்போது தான் வந்துள்ளது.ஓபிஎஸ் மட்டும் அல்ல எடப்பாடி பழனிசாமி மீதும் கவர்னரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.பன்னீர்செல்வம் மட்டுமல்ல விரைவில் முதலமைச்சர் பழனிசாமி மீதும் வழக்கு விசாரணை நடைபெறும்.எடப்பாடி பழனிசாமி தேர்தலுக்கு மட்டுமல்ல,கொள்ளையடிக்கவும் தயாராகி விட்டார்” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க