July 25, 2018
158 வது வருமான வரி தினத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் திரளான தொழில்துறையினர் கலந்து கொண்டனர்.
கடந்த 1860 ஆண்டு ஜூலை 24 ம் தேதி ஆங்கிலேய ஆட்சியின் போது இந்தியாவில் வருமான வரி செலுத்தும் முறை சர் ஜோம்ஸ் வில்சன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த தினத்தை நினைவு கூறும் வகையிலும் வருமான வரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஆண்டுதோறும் வருமான வரி தினம் என இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக 158வது வருமான வரி தினத்தை முன்னிட்டு வருமான வரித்துறை சார்பில் கோவையில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு பேசிய கோவை மண்டல தலைமை வருமான வரித்துறை ஆணையர் கிருஷ்ணகுமார்,சுதந்திரத்தின் போது 50 கோடியாக இருந்த வருமான வரி தற்போது லட்சம் கோடியை தாண்டியுள்ளதாக கூறினார்.
மேலும் கடந்தாண்டை காட்டிலும் நடப்பாண்டில் 27 சதவீதம் அளவிற்கு வருமான வரி அதிகரித்து உள்ளதாக கூறிய அவர் இருப்பினும் முழு கணிணிமயமாக்கப்பட்டு எளிமையாக்கப்பட்டுள்ள வருமான வரி செலுத்தும் முறை குறித்து போதுமான விழிப்புணர்வு மக்களிடம் இல்லை எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள்,வருமான வரித்துறை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.