• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரயிலின் முழு விவரங்களையும் இனி வாட்ஸ்ஆப் மூலமாக தெரிந்துகொள்ளலாம்

July 24, 2018 தண்டோரா குழு

நாம் பயணம் செய்யும் ரயிலின் முழு விவரங்களையும் இனி வாட்ஸ் ஆப் மூலம் அறிந்து கொள்ளும் முறையை ஐஆர்டிசி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

நாளுக்கு நாள் ரயிலில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே செல்கின்றது. இதனால் பயணிகளின் சிரமத்தை குறைக்க ரயில்வே நிர்வாகம் பல்வேறு சிறப்பு வசதிகளை செய்து வருகிறது.இதில் பயணிகள் பெரிதும் சிரமப்படுவது தங்கள் பயணம் செய்யும் ரயில் சில நேரங்களில் தாமதமாக வருவது தான்.இதனை தவிர்க்கும் வகையில் ஐஆர்டிசி ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

பயண இணையதளமான மேக் மை டிரிப்-உடன் இணைந்து இந்திய ரயில்வே இந்த சேவையை கொண்டு வந்துள்ளது.அதன்படி ரயில் எந்த நிலையத்தில் உள்ளது,எப்போது எந்த ரயில் நிலையத்திற்கு வந்து சேரும்,PNR Status,ரயில் கிளம்பும் நேரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பயணிகள் இனி வாட்ஸ்ஆப் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.அதற்கு 73493-89104 என்ற எண்ணை செல்போனில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் வாட்ஸ் ஆப் செயலிக்குச் சென்று,பயணம் செய்ய வேண்டிய ரயிலின் எண்ணை டைப் செய்து சேமித்து வைத்த எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.அனுப்பிய பின்,வாட்ஸ் ஆப்பில் இரண்டு டிக்குகள் தோன்றிய சில வினாடிகளில்,தாங்கள் பயணிக்கவுள்ள ரயிலின் தற்போதைய நிலை குறித்த தகவல்கள் வாட்ஸ் ஆப்புக்கு வந்து சேரும்.

மேலும் படிக்க